News January 14, 2025
பயிற்சியாளர் கம்பீர் மாற்றம்?

தலைமை பயிற்சியாளர் கம்பீரின் பதவி நீட்டிப்பு சாம்பியன்ஸ் டிராபியில் அணியின் செயல்திறனைப் பொறுத்தது என கூறப்படுகிறது. CTக்கு பிறகு BCCI பரிசீலனை செய்து முடிவெடுக்கும். அதிலும் IND தோல்வியடைந்தால், கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது. அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து IND 10 டெஸ்ட்டில் 6ல் தோல்வியடைந்துள்ளது. BGTயின் போது வெடித்த சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே.
Similar News
News December 8, 2025
சற்றுமுன்: விலை ₹1000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லாத நிலையில், வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 குறைந்து ₹198-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளதால், நம்மூரில் வரும் நாள்களில் விலை மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News December 8, 2025
EPS கட்சியை அழிக்கிறார்: செங்கோட்டையன்

அதிகாரத்தில் இருக்கிறேன் என்ற மனநிலையில் EPS கட்சியை அழிக்கிறார் என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். தன்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கியதாக கூறிய அவர், அவரால் பாதிக்கப்படுவது அதிமுக என்ற மக்கள் இயக்கமும், கோடான கோடித் தொண்டர்களும்தான் என கூறியுள்ளார். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லாமல் போனதற்கு EPS-ன் மனநிலை மட்டுமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
FLASH: ஷாக் கொடுத்த SHARE மார்கெட்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 169 புள்ளிகள் சரிந்து 85,542 புள்ளிகளிலும், நிஃப்டி 62 புள்ளிகள் சரிந்து 26,124 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. RBI, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை குறைத்த பிறகு சந்தைகள் ஏறும் என கணிக்கப்பட்ட நிலையில், மாறாக சரிவைக் கண்டுள்ளன.


