News January 14, 2025

‘மக்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள்’

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி, கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய அமைச்சர், 100% விதிகளை பின்பற்றி வாக்கு சேகரிப்போம். கடந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மக்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று அவர்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள்” என்றார்

Similar News

News December 9, 2025

ஈரோடு: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்யவும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது இது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 9, 2025

ஈரோட்டில் கொடூரக் கொலை: கணவன் கைது

image

பெருந்துறை காஞ்சிகோயில் சாலையில் கடந்த 7ம் தேதி காஞ்சிபுரம் ரோட்டை சேர்ந்த விஜயா என்பவர் கழுத்தில் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஏற்கனவே விவாகரத்தான விஜயாவின் கணவர் செங்கோட்டையனுக்கும் இவருக்கும் ஜீவனாம்சம் பெறுவதில் தகராறு இருந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட செங்கோட்டையன் சாலையில் வைத்து கழுத்தில் குத்தி கொலை செய்தார் இந்த வழக்கில் செங்கோட்டையனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

News December 9, 2025

​சென்னிமலை அருகே சோகம்: விவசாயி பலி

image

​சென்னிமலை அடுத்த கவுண்டனூரைச் சேர்ந்தவர் மாகாளி (63). விவசாயக் கூலியான இவர், கடந்த 6-ம் தேதி காலை அங்குள்ள வயல்வெளியில் மயங்கிக் கிடந்தார். தகவலறிந்து வந்த மகன் பாலகிருஷ்ணன், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். பரிசோதனையில் அவருக்குத் தலையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மாகாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!