News March 26, 2024

மயிலாடுதுறையில் செயல்வீரர்கள் கூட்டம்

image

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக பாமக தமிழ் மாநில காங்கிரஸ் அமமுக தமாக புதிய நிதி கட்சி இந்திய ஜனநாயக கட்சி தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

Similar News

News December 31, 2025

வரலாற்று சிறப்புடைய மயிலாடுதுறை!

image

மயிலாடுதுறை அரசாங்க பதிவுகளில் பல ஆண்டுகளாக மாயவரம் என்றே இருந்துள்ளது. பின்பு இவ்வூர், “மயிலாடுதுறை” என்று எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. “ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பை பெற்றுள்ள இந்நகரம், விவசாயம், மீன்பிடி என இரு வேறு தொழில் வளங்களை கொண்டுள்ள ஒரு சிறப்பு மாவட்டமாகும். SHARE பண்ணுங்க!

News December 31, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

உங்களது வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாகவும், அதை திரும்பி அனுப்புமாறு வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை, பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 31, 2025

மயிலாடுதுறை: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை கடத்திய, காரைக்கால் நெய்வேச்சேரி பெரியார் நகரை சேர்ந்த கார்த்திகேயன்(44) என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இவர் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!