News January 14, 2025
பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. நேற்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101ஐ தாண்டியது. இந்நிலையில் இன்று அதன் விலை சிறிது குறைந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து, ரூ.100.80க்கு விற்பனையாகிறது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 42 காசுகள் குறைந்து, ரூ.92.39ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News December 8, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மூலம் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ-மாணவியர்களுக்கான, இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் 09.12.2025 முதல் 12.12.2025 வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News December 8, 2025
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2014-ல் ₹62-ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது ₹90-க்கும் கீழ் சென்றுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், இறக்குமதி பொருள்களின் விலையில் எதிரொலிக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, மின்னணு பொருள்கள், செல்போன், லேப்டாப், மருந்துகள், கார்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
News December 8, 2025
புடினை தொடர்ந்து இந்தியா வரும் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விசிட்டில் PM மோடி அவரிடம் உக்ரைன் உடனான போர் குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து ஜெலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதால், உக்ரைன் தரப்பு கோரிக்கைகளை PM கேட்டறியலாம். இதன்பிறகு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.


