News March 26, 2024
பொதுமக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியானது

தமிழகத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வருவதால், குழந்தைகளுக்கு காய்ச்சல், அம்மை, போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், https://ihip.mohfw.gov.in/cbs/#!/ என்ற இணையதளத்தில் பெயர், இடம், தொலைபேசி எண், தொற்று விவரங்களை பொதுமக்கள் நேரடியாக பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெயில் காலம் என்பதால் எந்த தொற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Similar News
News December 30, 2025
நந்தினி தற்கொலை.. கலங்க வைக்கும் கடைசி நிமிடம்

கெளரி சீரியல் நடிகை நந்தினி, தற்கொலை செய்துகொண்ட துயரச் செய்தி சின்னத்திரை வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் பெருந்துயரமே, அவரது இறப்புக்கு முன்பு நடித்த காட்சி தான். ஏனென்றால், தற்கொலைக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சீரியல் ஷூட்டிங்கில், தற்கொலை செய்யும் காட்சியே படமாக்கப்பட்டுள்ளது. அதில் ரீலுக்காக நடித்த நந்தினி, ரியலாகவே தற்கொலை செய்தது கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. <<-se>>#RIP<<>>
News December 30, 2025
பெருமாள் முகத்தில் ஏன் வடுக்கள் உள்ளது தெரியுமா?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் முகத்தில், வடுக்கள் இருப்பதன் காரணம் தெரியுமா? இங்கு பெருமாள் பார்த்தசாரதி (அர்ஜுனனின் சாரதி) ரூபத்தில் உள்ளார். மகாபாரதப் போரில், பீஷ்மர் விடுத்த அம்புகள் கண்ணன் மீது பட்டதாகவும், அதன் வடுக்களே பெருமாளின் முகத்தில் தெரிவதாகவும் கூறப்படுகிறது. இந்த வடுக்களை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாளின் முகத்தில் மட்டுமே காணமுடியும். இத்தகவலை பகிருங்கள்.
News December 30, 2025
திமுகவை ஒழிப்பதே Common Agenda: எல்.முருகன்

கமலாலயம் எழுதிக் கொடுப்பதை தான், அதிமுக அறிக்கையாக வெளியிடுகிறது என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணி கட்சிகளுக்கு CM ஸ்டாலின் தான் அறிக்கை எழுதி கொடுக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற Common Agenda-வுடன் தான், NDA கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


