News January 13, 2025

திருச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொது மக்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க சேவை மையத்தை இன்று மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் திறந்து வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை 89391 – 46100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம். இந்த நிகழ்வில் தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 13, 2025

திருச்சி: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 13, 2025

திருச்சி: லஞ்சம் வாங்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

image

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500 லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் வருவாய் உதவியாளர் சுபேர்அலி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில், முன்னாள் வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 13, 2025

திருச்சி: அஞ்சல் ஊழியரிடம் தவறாக நடந்த காவலர் சிறையில் அடைப்பு

image

திருச்சி, பொன்மலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் 25 வயது பெண் ஊழியர் 08.08.25 அன்று டூவீலரில் வேலைக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து மானபங்கம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காணக்கிளியநல்லூர் காவல் நிலைய 2ஆம் நிலை காவலர் கோபாலகிருஷ்ணனை (32) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!