News January 13, 2025
நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (ஜன.14) முதல் ஜன.17 ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜன,14,15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு நேர அட்டவணை படியும், ஜன.17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணை படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
சென்னை: இனி What’s App-லயே எல்லாம்! SUPER NEWS

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை What’s Appலயே பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)
News August 25, 2025
சென்னை: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள உள்ளுர் வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <
News August 25, 2025
சென்னை: What’s App இருக்கா! உஷார்

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் சுரேஷ்குமார். இவருக்கு What’s App-ல் மெசேஜ் ஒன்று வந்தது. அது பைல் வடிவில் இருந்ததால், அதை அவர் கிளிக் செய்தார். இதனையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சம் எடுக்கப்பட்டதாக SMS வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து யுபிஐ பயனர்களை குறிவைத்து பணமோசடி நடந்து வருவதால் கவனமாக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (SHARE)