News January 13, 2025
காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் அரச்சலூர் அருகே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உடலை கைப்பற்றிய அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Similar News
News January 18, 2026
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.19) காலை 9மணி முதல் மாலை 5மணி வரை, தளவாய்பேட்டை, ஆப்பக்கூடல், ஜம்பை, எலவமலை, வைரமங்கலம், அரச்சலூர் நகர், தலவுமலை, வடபழனி, கந்தசாமிபாளையம், சித்தோடு, நரிப்பள்ளம், பெரியபுலியூர், சேவக்கவுண்டனூர், பெருமாள்மலை, ஓலப்பாளையம், செட்டிபாளையம், நத்தக்காடையூர், காடையூர், கவுண்டம்பாளயம், காங்கயம்பாளையம், பழையக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 18, 2026
ஈரோடு மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1). ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2.) ஈரோடு மாவட்ட ஆட்சியர் 0424-2260211 3).மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 0424-2260211. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7). முதியோர்கள் உதவி எண் 14567. 8).பேரிடர் கால உதவி 1077. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. 10).இரத்த வங்கி சேவை 1910, இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News January 18, 2026
ஈரோடு: பசு மாடு வாங்க ரூ.1,00,000

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!


