News January 13, 2025
1,29,886 பயனாளிகள் பயன் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளுக்கு ஈடாக தலா ரூ.1,000/- வீதம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது இதன் மூலம் சுமார் 1,29,886 பயனாளிகள் பயன் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.
Similar News
News January 14, 2025
திருவள்ளுவர் தினம் -புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு தந்த தெய்வப் புலவர் வள்ளுவர் பிறந்த இந்நாளில், அவர் காட்டிய நன்னெறிகளை நெஞ்சில் நிறுத்தி எந்நாளும் கடைபிடிப்போம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
News January 14, 2025
புதுச்சேரி கவர்னருக்கு சபாநாயகர் வாழ்த்து
தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் நேரில் சந்தித்து பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். அது துணைநிலை ஆளுநரின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News January 14, 2025
புதுச்சேரியில் நாளை இறைச்சி விற்க தடை
உழவர்கரை நகராட்சி ஆணைர் சுரேஷ்ராஜ், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருவள்ளுவர் தினம் நாளை (15ம் தேதி) கொண்டப்படுகிறது. அதனால், உழவர்கரை நகராட்சி பகுதிகள் மற்றும் வில்லியனுார் கொம்யூனுக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி மீன் மற்றும் இதர மாமிச விற்பனை அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது மீறினால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்