News January 13, 2025
ஸ்ரீரங்கம் கோவிலில் மார்கழி 29ஆம் நாள் நிகழ்வுகள்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் உற்சவர் எழுந்தருளி வந்த நிலையில் இன்று 29வது நாள் நிகழ்வுகள் நடைபெற்றது. இதனை ஒட்டி இன்று பரமபத நாதர் சன்னதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் பெற்றம் மேய்த்துண்ணும் பெருமான் திருக்கோலத்தில் காட்சியளித்தனர். இதனைக் காண திரளான பக்தர்கள் வருகை தந்தனர்..
Similar News
News December 8, 2025
திருச்சி: ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

‘ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 8, 2025
திருச்சி: என்.ஐ.டி-யில் வேலை வாய்ப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கணக்கு அதிகாரி, விடுதி மேலாளர், பல்நோக்கு பணியாளர் என மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை www.nitt.edu/home/other/jobs/ என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 13 ஆம் தேதிக்குள், தேசிய தொழில்நுட்ப கழக முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
திருச்சி: தொலைந்த பணப்பையை மீட்ட போலீசார்

ரயில்வே பாதுகாப்பு படையினர் “ஆபரேஷன் அமானத்” என்ற பெயரில், ரயில் பயணிகள் தவறவிடும் பொருட்களை மீட்டு ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் நேற்று தவறவிட்ட பணப்பையை, ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு, பயணியிடம் உரிய அடையாளங்களை கேட்டறிந்து மீண்டும் ஒப்படைத்தனர்.


