News March 26, 2024
மதுரை – எச்சரிக்கும் காவல்துறை

மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட நத்தம் பறக்கும் பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இருவர் இறந்த சோகமும் நடந்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் விபத்து நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது..
Similar News
News November 16, 2025
மதுரை: சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ

விளாச்சேரியை சேர்ந்த ரஞ்சித்குமார்(27) மதுரை கொசவபட்டியில் உள்ள குலதெய்வம் கோயிலில், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதனால் சிறுமி 5 மாத கர்ப்பமானார். இதை அறிந்த மகளிர் ஊர் நல அலுவலர் பத்மா இது குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ரஞ்சித்குமார் மீது போக்சோ சட்டத்தில் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
மதுரை: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

மதுரை மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு <
News November 16, 2025
மதுரை: மனைவியுடன் தகராறு… உயிரை மாய்த்த தொழிலாளி

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாம்பிரவேஷ் மகன் திவாகர்(37). இவர் கடச்சநேந்தலில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து பெயிண்டில் கலக்கும் டர்பைண்டன் ஆயிலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


