News March 26, 2024
மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி தலைவர்களின் திருவுருவச்சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க வெள்ளை துணிகளை கொண்டு மூடும் வேலை நடைபெற்று வந்தது இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கும் துணிகளால் மூடப்பட்டது.பின்னர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் துணிகளை எடுக்க உத்தரவிட்டார்.
Similar News
News November 16, 2025
கள்ளக்குறிச்சி: விவசாயி மர்ம மரணம்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி (62). இவர் நேற்று முன்தினம் அவரது விவசாய நிலத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இந்நிலையில், இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் அனைவரும் நேற்று (நவ.15) சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், களைந்து சென்றனர்.
News November 16, 2025
கள்ளக்குறிச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
கள்ளக்குறிச்சியில் 333 பேர் ஆப்சென்ட்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 2,389 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 2,056 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 333 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


