News January 13, 2025

கர்நாடகா மது பாக்கெட்டுகளை கடத்தி விற்பனை

image

காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் போலீசார், மாமண்டூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கர்நாடகா மது பாக்கெட்டுகளை கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Similar News

News August 23, 2025

ராணிப்பேட்டை மக்களே ஜாக்கிரதை!

image

ராணிப்பேட்டை மக்களே, இன்று காலை 10 மணி வரை உங்கள் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானியால் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆகையால் முன்னெச்சரிக்கையாக தண்ணீர் நிரப்பி வைப்பது, சாதனங்களுக்கு சார்ஜ் போடுவது, வெளியில் செல்லும்போது குடை கொண்டு செல்வது போன்ற முக்கியமான வேலைகளை முடித்து வைத்துக்கொள்ளுங்கள். சாலையில் கவனமாக போங்க. SHARE பண்ணுங்க.

News August 23, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் -22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

News August 23, 2025

ராணிப்பேட்டை: இலவச பயிற்சி வகுப்பு

image

இராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 2ம் நிலை காவலர் பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/DV9npFmjGcFgBexG7 என்ற
Google link மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!