News January 12, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News December 27, 2025
ராமநாதபுரம்: இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

ராமநாதபுரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
News December 27, 2025
இராம்நாடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 27, 2025
இராம்நாடு: புத்தாண்டு முதல் புதிய நேரத்தில் ரயில்

இராமேஸ்வரம் – சென்னை சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டி எண்: 22662 புத்தாண்டை முன்னிட்டு புதிய நேரத்தில் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் சென்றடையும். நேரம் பின்வருமாறு 09:10 PM இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு இராமநாதபுரம்,பரமக்குடி, காரைக்குடி, திருச்சி,செங்கல்பட்டு வழியாக சென்னை சென்றடையும். குறிப்பாக ராமேஸ்வரத்தில் இருந்து சேது ரயில் 20 நிமிடம் தாமதமாக புறப்படும்.


