News January 12, 2025

நாதகவில் இருந்து சேலம் நிர்வாகிகள் விலகல்

image

நாதகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சேலம் மாநகர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன் தலைமையில், வணிகர் பாசறை இணை செயலாளர் வசந்தகுமார், சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளனர். இது சேலத்தில் நாதகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Similar News

News September 15, 2025

Parenting: காய்ச்சலின் போது குழந்தைகள் குளிக்கலாமா?

image

குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்படும்போது குளிக்கலாமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. காய்ச்சலின் போது, ​​உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் உடல் சூட்டை தணிக்கவும், உடலில் சேரும் பாக்டீரியாக்களை நீக்கவும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஒருவேளை குளிக்கமுடியாத பட்சத்தில், குழந்தைகளில் உடலை வெதுவெதுப்பான நீரில் துடைப்பது நல்லது. SHARE.

News September 15, 2025

AI மூலம் 8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு

image

Nano Banana என்று பொதுமக்கள் வரை பலரும் இன்று AI பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில், ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கில், 8%-க்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை AI உருவாக்கும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக, நிதி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் AI அதிகளவு பயன்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் AI கருவி எது?

News September 15, 2025

இன்றிரவு 12 மணிக்குள் இதை செய்யுங்கள்

image

வருமானவரி கணக்கு தாக்கல் (IT Returns) செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே கடைசி என வருமானவரித் துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆகவே, உங்கள் கணக்கை இன்றிரவு 12 மணிக்குள் <<17715443>>தாக்கல்<<>> செய்துவிடுங்கள். தவறினால் <<17712332>>₹5,000 அபராதம்<<>> செலுத்த வேண்டியிருக்கும். இதுவரை 6.7 கோடி பேர் தங்கள் IT Returns-ஐ தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!