News January 12, 2025
உரிமம் வழங்கியதில் ஊழல்: நாராயணசாமி

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் மதுபான ஆலை உரிமத்தைப் பெற ஆளுநர் அனுமதி இல்லாமல் முதல்கட்ட கடிதத்தை 8 கம்பெனிகளுக்கு தந்துள்ளதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
Similar News
News September 11, 2025
புதுவையில் இன்றைய மின்தடை பகுதிகள்

புதுச்சேரியில் கண்டமங்கலம் துணை மின் நிலையம், கிருஷ்ணா நகர், அரியாங்குப்பம் ஆகிய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செப்டம்பர் 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணா நகர், செந்தில் நகர், மடுவுப்பேட்டை , ரெயின்போ நகர் பி.எஸ் பாளையம், பள்ளித்தென்னல், அரங்கநாதபுரம், கோண்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். அணைவியாருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
புதுவை: சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு தகவல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தின விழா அறிவிப்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, இண்டக்சன் ஸ்டவ் மற்றும் குக்கர் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை ஒட்டி வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளோ அல்லது அவருடைய வாரிசுகளோ பென்ஷன் அடையாள அட்டை காட்டி இலவச அன்பளிப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
News September 11, 2025
புதுவை: கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான தேர்வு தேதி

புதுவை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (21.09.2025) அன்று புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. அனுமதி சீட்டை, தேர்வர்கள் https://recruitment.py.gov.in இணையதளத்தில் இன்று பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!