News January 12, 2025
BREAKING: 5 மாவட்டங்களில் இன்று கனமழை

5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று MET எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது. 15ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் MET கணித்துள்ளது. SHARE IT.
Similar News
News December 24, 2025
வாழ்வாதாரத்தை காக்க போராடும் விவசாயிகள் : CM

MGNREGA திட்டம் மாற்றியமைக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் MGNREGA திட்டத்தை மீட்டெடுக்க 389 இடங்களில் ஏழை விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது TN-ல் இருந்து ஒலிக்கும், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை பாஜக உணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 24, 2025
பொங்கல் பரிசாக ₹5,000.. அமைச்சர் HAPPY NEWS

பொங்கல் பரிசுத் தொகை குறித்த தமிழக அரசின் அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். EPS கோரிக்கையை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், இதுகுறித்து CM ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். அதனால், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
News December 24, 2025
விஜய் புதுசா முளைச்ச ஈ: முத்தரசன்

ஓட்டை பிரிக்கத்தான் விஜய்யை பாஜக, கட்சி ஆரம்பிக்க சொல்லி இருப்பதாக CPI-ன் முத்தரசன் சாடியுள்ளார். புதுசா ஒரு கட்சி இருக்கு, புதுசா முளைச்ச ஈ, இன்னும் றெக்கையே முளைக்கல, சிலந்தி வலையில் மாட்டி இருக்கு என அவர் தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் விஜய்<<18649356>> ஒரு Spoiler<<>> என பியுஷ் கோயல் சொன்னதாக ஒரு தகவல் வெளியான நிலையில் முத்தரசன் இந்த விமர்சனங்களை வைத்துள்ளார்.


