News January 12, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று கூறுகையில், ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என மர்மநபர்கள் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தை கூறினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பங்குசந்தையில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Similar News
News September 11, 2025
புதுவை: அரசு பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை

காரைக்கால் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான (2025 – 2026) முதுகலை முதலாம் ஆண்டு (PG First Year) மாணவ மாணவிகளின் சேர்க்கை வருகிற (16.09.2025) காலை 10 மணி முதல் கல்லூரியில் முதலாவது தளத்தில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் நடைபெற உள்ளது என்று கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
புதுவையில் இன்றைய மின்தடை பகுதிகள்

புதுச்சேரியில் கண்டமங்கலம் துணை மின் நிலையம், கிருஷ்ணா நகர், அரியாங்குப்பம் ஆகிய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செப்டம்பர் 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணா நகர், செந்தில் நகர், மடுவுப்பேட்டை , ரெயின்போ நகர் பி.எஸ் பாளையம், பள்ளித்தென்னல், அரங்கநாதபுரம், கோண்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். அணைவியாருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
புதுவை: சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு தகவல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தின விழா அறிவிப்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, இண்டக்சன் ஸ்டவ் மற்றும் குக்கர் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை ஒட்டி வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளோ அல்லது அவருடைய வாரிசுகளோ பென்ஷன் அடையாள அட்டை காட்டி இலவச அன்பளிப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.