News March 26, 2024

திருச்சி அருகே விபத்து; நேற்று மேலுமொருவர் மரணம் 

image

பெட்டவாய்த்தலை அருகே காவல்காரப்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன்.திருச்சிக்கு கடந்த 20-ந் தேதி தனது மனைவி பார்வதி மகன் கோகுல் ஆகியோருடன் பைக்கில் சென்ற போது எதிரே வந்த 108ஆம்புலன்ஸ் மோதியதில் ஜெகநாதன்,பார்வதி நிகழ்விடத்திலேயே இறந்தார்கள்.இந்நிலையில் திருச்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

Similar News

News November 16, 2025

திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வில் 576 பேர் ஆப்சென்ட்

image

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1, 14 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 3951 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3375 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 576 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இன்று ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2, 51 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 15,286 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

News November 16, 2025

திருச்சி: நண்பனை கொலை செய்த இருவர் கைது

image

மணப்பாறை அருகே கருணாநிதி என்பவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், எஸ்பி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இறந்தவரின் நண்பர்களான சூரகாலப்பட்டியை சேர்ந்த செல்வராஜ், கோட்டை கீழையூரை சேர்ந்த பூபதி ஆகியோர் முன்விரோதம் காரணமாக கருணாநிதியை கொலை செய்து பாலத்திற்கு அடியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நேற்று கொலையாளிகளை இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News November 16, 2025

திருச்சி: துணை முதலமைச்சரை அனுப்பி வைத்த கலெக்டர்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, சென்னை செல்வதற்காக (15.11.2025) திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், துணை முதல்வருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்று, சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்.

error: Content is protected !!