News January 12, 2025
இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் ஜன.12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளான சென்னை முதல் டெல்டா வரை மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும் மழை பெய்யும். பொங்கல் விடுமுறை நாள்களில் மழை பெய்வது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. ஆனால், இந்த மழை ஒன்றும் உங்களது விடுமுறைக் காலப் பயணங்களை பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 9, 2025
சென்னை: ஸ்கேன் எடுக்க சென்றவரிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை கொளத்தூரில் தனியார் ஸ்கேன்ஸ் லேபில் கில் கவின் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக கடந்த டிச.5ஆம் தேதி, ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று (டிச.8) கில் கவின் என்பவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
S.A.சந்திரசேகரை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள்

சென்னை எம்.ஆர்.சி நகரில் காங்கிரஸ் குழுவினர் இன்று த.வெ.க தலைவர் விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகரை நேரில் சந்தித்தனர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். கடந்த சில மாதங்களாக த.வெ.க., காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
News December 8, 2025
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ.. தள்ளிப்போகும் திறப்பு விழா?

சென்னை, பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், சில ரயில் நிலையங்களில் கிளியரன்ஸ் கிடைப்பதற்கு தாமதமாவதால், ஜனவரியில் மெட்ரோ திறக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


