News January 12, 2025

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய நிலவரம் (கிலோ) :  தக்காளி ரூ.24க்கும், கத்திரிக்காய் ரூ.40க்கும், அவரைக்காய் ரூ.110 க்கும், வெண்டை ரூ.40க்கும், முருங்கை ரூ.180க்கும், முள்ளங்கி ரூ.40க்கும், மாங்காய் ரூ. 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News

News December 10, 2025

கோழிக்கடை அருகே மதுப்பாட்டில் விற்ற நபர் கைது

image

கருங்குழி கிராமத்தில் உள்ள பெருமாள் என்பவரது கோழிக்கடை அருகே உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெருமாள் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 8 மதுப்பாட்டில்கள் மற்றும் 5500 பணம் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்

News December 10, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய தகவல்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வரும் காடு புறம்போக்கு நிலங்களுக்கு 1,112 தனி நபர்களுக்கு வன உரிமை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

News December 10, 2025

சாலையை கடந்த போது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

image

சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் இன்று மளிகை பொருட்களை வாங்க கெடிலம் கடைவீதி சென்று மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக கெடிலம் பேருந்து நிறுத்தம் எதிரே சாலையை கடக்கும் போது கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது ஆட்டோ சுந்தரம் மீது மோதியதில் சுந்தரம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆட்டோ ஒட்டுனர் ஸ்ரீதர் மீது போலீசார் வழக்குபதிந்தனர்.

error: Content is protected !!