News January 12, 2025
ரிஷப் பண்ட்டிடம் என்ன பிரச்னை?

இங்கி. டி20 தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் டி20ல் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரிலும் கே.எல்.ராகுலை கீப்பராக கொண்டுவரலாமா? என BCCI யோசனையில் உள்ளதாக தகவல் வெளிவருகிறது. காரணம், சாம்பியன்ஸ் ட்ராபி. அதிலும் பண்ட் வெளியேற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. பண்ட்டிடம் என்ன பிரச்னை உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி அணியில் மூவரில் யார் முக்கியம்?
Similar News
News August 5, 2025
ஷூட்டிங் ஓவர் பாஸ்… SK செம ஹேப்பி

சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால் ‘பராசக்தி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட நிலையில், தற்போது படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படுகிறது. ‘பராசக்தி’ ஜனநாயகனுடன் மோத உள்ளதாக கூறப்படுவதால் பொங்கலுக்கு டபுள் ட்ரீட் உள்ளது.
News August 5, 2025
அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக: நயினார்

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்றுகூடி கலந்தாலோசித்து முடிவு செய்வோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக தான் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து விலகிய OPS குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்த நயினார் தேர்தல் பணியில் முழுவீச்சில் பாஜக இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News August 5, 2025
சிராஜுக்கு மட்டும் பாரபட்சம்?

இந்திய அணியில் சிராஜுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பணிச்சுமை காரணமாக பும்ராவிற்கு அடிக்கடி ஓய்வு தரும் நிர்வாகம், சிராஜின் பணிச்சுமையை கருத்தில் கொள்ள தயங்குவதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். நடப்பாண்டில் சிராஜ் 213.3 ஓவர்கள் வீசி 27 விக்கெட்களை வீழ்த்தியதையும், பும்ரா 129.4 ஓவர்கள் வீசி 16 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.