News January 12, 2025
தொடரை கைப்பற்றுமா இந்தியா?

IND vs IRE மகளிர் அணிகள் மோதும் 2ஆவது ODI போட்டி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 10ஆம் தேதி நடந்த முதல் போட்டியில், IND அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் IND முன்னிலை வகிக்கிறது. அதனால், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இன்று களமிறங்க உள்ளது. அதேபோல் தொடரை இழக்காமல் இருக்க அயர்லாந்து அணி கடுமையாக போராடும்.
Similar News
News August 5, 2025
டேல் ஸ்டெயின் கேட்டதை கொடுத்த சிராஜ்

கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுப்பார் என டேல் ஸ்டெயின் கணித்திருந்தார். 5-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டை மட்டுமே சிராஜ் எடுத்தார். ஆனால், 2-வது இன்னிங்சில் அசாத்தியமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார். வெற்றிக்கு பின் நீங்கள் கேட்டதை கொடுத்துட்டேன் என டேல் ஸ்டெயினுக்கு, X பக்கத்தில் சிராஜ் பதில் அளித்துள்ளார்.
News August 5, 2025
அன்புமணிக்கு ஒன்னும் தெரியாது: துரைமுருகன் பதிலடி

‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பணம்’ மேற்கொண்டு வரும் அன்புமணி, அமைச்சர் துரைமுருகனை கடுமையாக சாடியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார் என துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
News August 5, 2025
ஷூட்டிங் ஓவர் பாஸ்… SK செம ஹேப்பி

சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால் ‘பராசக்தி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட நிலையில், தற்போது படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படுகிறது. ‘பராசக்தி’ ஜனநாயகனுடன் மோத உள்ளதாக கூறப்படுவதால் பொங்கலுக்கு டபுள் ட்ரீட் உள்ளது.