News January 12, 2025
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களிடம் காங்கேசன்துறை முகாமில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
Similar News
News August 5, 2025
டேல் ஸ்டெயின் கேட்டதை கொடுத்த சிராஜ்

கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுப்பார் என டேல் ஸ்டெயின் கணித்திருந்தார். 5-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டை மட்டுமே சிராஜ் எடுத்தார். ஆனால், 2-வது இன்னிங்சில் அசாத்தியமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார். வெற்றிக்கு பின் நீங்கள் கேட்டதை கொடுத்துட்டேன் என டேல் ஸ்டெயினுக்கு, X பக்கத்தில் சிராஜ் பதில் அளித்துள்ளார்.
News August 5, 2025
அன்புமணிக்கு ஒன்னும் தெரியாது: துரைமுருகன் பதிலடி

‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பணம்’ மேற்கொண்டு வரும் அன்புமணி, அமைச்சர் துரைமுருகனை கடுமையாக சாடியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார் என துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
News August 5, 2025
ஷூட்டிங் ஓவர் பாஸ்… SK செம ஹேப்பி

சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால் ‘பராசக்தி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட நிலையில், தற்போது படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படுகிறது. ‘பராசக்தி’ ஜனநாயகனுடன் மோத உள்ளதாக கூறப்படுவதால் பொங்கலுக்கு டபுள் ட்ரீட் உள்ளது.