News January 12, 2025
இன்றைய (ஜன. 12) நல்ல நேரம்

▶ஜனவரி 12 ▶மார்கழி- 28 ▶கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 03.30 PM – 04.30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 AM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 PM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: மிருகசீரிடம் ▶சந்திராஷ்டமம்: விசாகம்.
Similar News
News August 5, 2025
தீவிர தேர்தல் Mood-ல் பாஜக

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த வாரத்தில் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், NDA கூட்டணி கட்சி MP-களுக்கு தேர்தல் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க, உள்துறை அமைச்சக வளாகத்தில் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்துள்ளது.
News August 5, 2025
தலைமறைவாக இருந்த நடிகை கைது

நடிகை மீரா மிதுனை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியில் வந்த அவர், கோர்ட்டுக்கு வராமல் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய சென்னை முதன்மை கோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.
News August 5, 2025
காஷ்மீரில் வட்டமிடும் போர் விமானங்கள்.. என்ன நடக்கிறது?

இந்திய விமானப்படையின் போர் விமானங்களை நள்ளிரவு முதல் அடிக்கடி பார்க்க முடிவதாக காஷ்மீர் மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று அம்மாநிலம் 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட தினம் என்பதால் பாதுகாப்பு கருதி போர் விமானங்கள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படலாம் என நேற்று முதல் செய்திகள் வருவதால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.