News January 12, 2025

ஊரே பற்றி எரிந்தாலும் கம்பீரமாக நின்ற வீடு

image

கலிபோர்னியா காட்டுத்தீயில் அனைத்தும் நாசமாகி வருகிறது. லாஸ் ஏஞ்செலஸ் நகரில் ஓரிடத்தில், சுற்றிலும் வீடுகள் எரிந்து சாம்பலாக, ஒரு வீடு மட்டும் கம்பீரமாக பளிச்சென சேதமின்றி நிற்கிறது. ரூ.78 கோடி மதிப்புள்ள தன் 3 மாடி வீடு தப்பியது ஓர் அதிசயம் என்று சொல்லும் அதன் ஓனர் டேவிட் ஸ்டீனர், fire proof கூரை, stucco மற்றும் கல் சுவர்கள், 50 அடி ஆழ ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் தான் அதன் பின்னுள்ள ரகசியம் என்கின்றார்.

Similar News

News January 19, 2026

ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

image

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதராக என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

News January 19, 2026

காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜன.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் கடந்த 3 நாள்களாக நடந்த மலர் கண்காட்சி, கார்னிவல் விழாவின் நிறைவு நாளையொட்டி இந்த விடுமுறையானது விடப்பட்டுள்ளது.

News January 19, 2026

EPSக்கு அன்று ஏமாற்று வித்தை.. இன்று: மனோ தங்கராஜ்

image

அதிமுக தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என EPS கூறியுள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய மனோ தங்கராஜ், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறியதற்கு, அதனை ஏமாற்று வித்தை என்று கூறிவிட்டு, நீங்கள் எதற்காக அறிவித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

error: Content is protected !!