News January 12, 2025
ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

தருமபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க, தருமபுரி வழியாக வரும் ரெயில்களில் ஜி.ஆர்.பி. மற்றும் ஆர்.பி.எப். போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில் பயணத்தின் போது, உடைமைகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News February 8, 2026
தருமபுரி மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து நாளை காலை 6 மணி முதல் அரூர், கடத்தூர், பொம்மிடி, உத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். புதிய பேருந்து நிலைய மாற்றத்தால் ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 8, 2026
தருமபுரி: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News February 8, 2026
தருமபுரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <


