News January 11, 2025
உள்ளாட்சி பதவிக்காலம் நிறைவு – கலெக்டர் அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமே(கி.ஊ) அல்லது ஊராட்சி மணியின் இலவச தொலைபேசி எண் 155340 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 8, 2025
சிவகங்கை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 8, 2025
சிவகங்கை: பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை கொள்ளை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த சாத்தப்பன் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். திருக்கார்த்திகைக்காக ஊருக்கு வந்து தீபம் ஏற்றிய பின் மீண்டும் கோயம்புத்தூருக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
சிவகங்கை: செய்தியாளரின் கண்கள் தானம்.!

திருப்புவனத்தில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணன் என்பவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவால் குடும்பத்தினரும், நண்பர்களும், சக ஊழியர்களும் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கண்ணனின் குடும்பத்தினர் மனிதாபிமானத்துடன் அவரது கண்களை தானமாக வழங்கினர். இதன்மூலம் இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


