News January 11, 2025

சிறுமி பலி: வதந்திகளை நம்ப வேண்டாம்

image

விக்கிரவாண்டி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிட வேண்டாம். மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுமி பலி விவகாரத்தில் 3 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குழந்தை தனியாக சென்று கழிவு நீர் தொட்டியில் விழுந்தது தெரியவந்துள்ளது என காவல்துறை தரப்பில் இன்று (ஜனவரி 11) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 2, 2026

விழுப்புரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

விழுப்புரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

திண்டிவனத்தில் அதிரடி கைது!

image

விழுப்புரம்: திண்டிவனம் ரோசனை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம், சங்கர், முருகன், பன்னீர்செல்வம், வாசுதேவன், செல்வராஜ், பாஸ்கரன் ஆகிய ஏழு பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

News February 2, 2026

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் த.தமிழ்வாணன் (40), தனியாா் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைப் பாா்த்து வந்தாா். அய்யூர், அகரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்புக் கட்டையில் மோதியதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!