News January 11, 2025

சூரிய ஒளி படாமல் இருந்தால் இவ்வளவு பிரச்னைகள் வருமா?

image

‘உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா’ என பாட வேணும்னா நல்லா இருக்கும். ஆனா சூரிய ஒளியே படாமல் இருந்தால், 1 வாரத்தில் விட்டமின் டி, மெலடோனின் குறையும். தூக்கம் தொலையும் என்கிறார்கள் டாக்டர்ஸ். இதுவே நீடித்தால் சோர்வு, மன அழுத்தம், பதட்டம், தசை, மூட்டு பலவீனம் என உடலும் மனதும் படாதபாடு படும். இதிலிருந்து தப்பிக்க விட்டமின் டி உணவு சாப்பிடுவதும், வெயில் படுமாறு 20-30 நிமிடம் இருப்பதும் போதுமானது.

Similar News

News August 5, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 5 – ஆடி 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை.

News August 5, 2025

இன்று எந்த திடீர் அறிவிப்பும் வராது: உமர் உறுதி

image

ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற யூகங்களை J&K CM உமர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஆனால் வரும் காலங்களில் அது நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். J&K யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைமுன்னிட்டு PM மோடி, அமித்ஷா இருவரும் நேற்று ஜனாதிபதியை சந்தித்ததால் மேற்கூறிய யூகங்கள் பரவியது.

News August 5, 2025

டிரம்ப் மிரட்டல்.. இந்தியா கண்டனம்!

image

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கினால் இன்னும் அதிகம் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், அமெரிக்கா ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்கா, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தேச நலன் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!