News March 26, 2024
தலைவாசல்: ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல்

தலைவாசல் நத்தகரை டோல்கேட்டில் நேற்று(மார்ச் 25) தோட்ட கலைத்துறை உதவி இயக்குநர் ஞானப்பிரியா தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், உரிய ஆவணம் இல்லாத ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 625 இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அந்த நபர் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News October 27, 2025
சேலம்: நாளை நடைபெறும் முகாம்கள் குறித்த விவரம்!

சேலத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் (அக்.28) நடைபெறும் இடங்கள்;
1) பாப்பம்பாடி சுய உதவிக் குழு கட்டிடம் பாப்பம்பாடி.
2)ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை.
3)தேவூர் பேரூராட்சி அலுவலகம் தேவூர்.
4) மேச்சேரி தனலட்சுமி மஹால் கந்தனூர்.
5)பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி திருமண மஹால் கருமந்துறை.
6) தலைவாசல் மகாலட்சுமி திருமண மண்டபம் நாவலூர்.
News October 27, 2025
சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.27) “நாம் ஹெல்மெட் அணிவது நமக்காக மட்டும் அல்ல, நம்மை நேசிப்பவர்களுக்காகவும்.
கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுங்கள்.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!
News October 27, 2025
சேலம்: ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி!

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று 27.10.2025 ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். பொது சேவையில் நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என உறுதியெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


