News January 11, 2025
காலாவதியான குளுக்கோஸால் கர்ப்பிணி பலி

மே.வங்கத்தில், அரசு ஹாஸ்பிடலில் காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்டதால் கர்ப்பிணி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 4 கர்ப்பிணிகள் ஆபத்தான நிலையில், சிகிச்சையில் பெற்று வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஹாஸ்பிடலில் குளுக்கோஸ் ஏற்றும்போது, டாக்டரை நாம் முழுமையாக நம்பியே அதற்கு உடன்படுகிறோம். அதிலும் இப்படி ஒரு பிரச்னையா என நெட்டிசன்கள் கேட்கின்றனர். ALERT!
Similar News
News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் CPI

குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் கவர்னர் RN ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக CPI அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், RN ரவியின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிரானது; மாநில அரசின் உரையை வாசிக்காமல், சொந்த கருத்துகளை வெளியிட்டு மரபுகளை களங்கப்படுத்துவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, <<18768093>>காங்.,<<>> தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
News January 20, 2026
சூனியம் வைத்து கொல்லப்பட்டாரா நடிகை?

Anti-aging ஊசிகளை எடுத்துக் கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு நடிகை <<16908229>>ஷெஃபாலி <<>>ஜரிவாலா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஷெஃபாலிக்கு சூனியம் வைத்து கொன்றதாக அவரது கணவரும் நடிகருமான பராக் தியாகி கூறியுள்ளார். யார் சூனியம் வைத்தார்கள் என்பது தனக்கு தெரியும் என குறிப்பிட்ட அவர், இது போல தங்கள் மீது 2 முறை சூனியம் வைக்கப்பட்டதாகவும் கூறினார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
News January 20, 2026
கவர்னர் அரசியல்வாதி அல்ல: சபாநாயகர் அப்பாவு

TN சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.24-ல் நிறைவு பெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சேந்தமங்கலம் MLA மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாளைய கூட்டத்தை ஒத்திவைப்பதாகவும், 22, 23-ல் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெறும் எனவும் அவர் கூறினார். ஜன.24-ல் CM ஸ்டாலினின் பதிலுரை இடம்பெறும் என்று குறிப்பிட்ட அவர், அரசின் உரையை வாசிப்பது கவர்னரின் கடமை; ஆனால் கவர்னர் அரசியல்வாதி போல செயல்படுவதாக விமர்சித்தார்.


