News January 11, 2025
ஈரோடு கிழக்கில் விஜயகாந்த் மகன் போட்டி?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதனால், அவருக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று இபிஎஸ்-யிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாராம். இபிஎஸ் இசைவு தெரிவித்தால், விஜய பிரபாகரன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News August 5, 2025
‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோ பாதுகாக்கப்படுமா?

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வணிக பயன்பாட்டிற்கு கோரும் எந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களும் இதுவரை ஏற்கப்படவில்லை என மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘Operation Sindoor’ (அ) ‘Ops Sindoor’ என்ற பெயரில் டிரேட்மார்க் கோரி, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 46 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதேவேளையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளது.
News August 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 5 – ஆடி 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை.
News August 5, 2025
இன்று எந்த திடீர் அறிவிப்பும் வராது: உமர் உறுதி

ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற யூகங்களை J&K CM உமர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஆனால் வரும் காலங்களில் அது நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். J&K யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைமுன்னிட்டு PM மோடி, அமித்ஷா இருவரும் நேற்று ஜனாதிபதியை சந்தித்ததால் மேற்கூறிய யூகங்கள் பரவியது.