News January 11, 2025

ஆதாரங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

image

சட்டப்பேரவையில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார். இவ்விவகாரத்தில், 12 நாட்கள் கழித்துதான் FIR பதிவு செய்யப்பட்டது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுத்திருந்த நிலையில், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

Similar News

News August 25, 2025

சென்னையில் மின்தடை..!

image

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்து. அதன்படி பாரிவாக்கம், தேனாம்பேட்டை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், தாம்பரம் போன்ற பகுதிகளில் நாளை(ஆக.26) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி- பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இருக்க மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

BIG NEWS: சென்னையில் 2 பேர் பரிதாப பலி

image

சென்னையில் விநாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரத்தில் பந்தல் அமைக்கும் போது பிரசாந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சிலைக்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பரத் என்பவர் உயிரிழந்துள்ளார். பண்டிகை காலங்களில் உஷாரா இருங்க.

News August 25, 2025

BREAKING: மயிலாப்பூர் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது

image

தேசிய ஆசிரியர் விருது, ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பையும், பள்ளிக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் மத்திய அரசின் விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவரால் இது வழங்கப்படுகிறது. மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி மற்றும் திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தமிழகத்திலிருந்து இந்தாண்டு தேர்வாகியுள்ளனர்.

error: Content is protected !!