News January 11, 2025
வேலையை விட்டு விவசாயத்தில் ஈடுபட ஆசை

திருச்சி மாவட்டம் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தனது ஆளுநர் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்திற்கு சென்றுவிடலாம் என ஆசைப்படுவதாக கூறினார். மேலும், தானும், தனது மனைவியும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிட்ட ஆளுநர், உலகுக்கே உணவு கொடுப்பவர்கள் விவசாயிகள் எனவும் புகழாரம் சூட்டினார்.
Similar News
News September 15, 2025
பாமக தலைவர் அன்புமணி: ECI அங்கீகாரம்

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்(ECI) கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதற்கான கடிதத்தை காட்டினார். மேலும், கடந்த மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை அங்கீகரித்துள்ளதாகவும், மாம்பழம் சின்னமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 15, 2025
கிரியாஊக்கியாக திகழ்ந்த அண்ணா: கமல்ஹாசன்

நாடக கலையில் தொடங்கி திரை கலையில் திகழ்ந்து அரசியலில் ஒளிர்ந்த விதத்தில் எனக்கு எந்நாளும் கிரியாஊக்கியாக அண்ணா திகழ்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்தி மாநிலங்களின் உரிமைகளுக்காக அவர் தந்து சென்ற அரசியல் தத்துவங்கள் நம்மைக் காக்கும் அரணாக திகழ்வதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News September 15, 2025
செங்கோட்டையனுடன் இணைந்தார் ஓபிஎஸ்

எம்ஜிஆர், ஜெ., ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றால், பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், செங்கோட்டையனுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்முறையாக உண்மையை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ள அவர், அடுத்த வாரம் நேரில் சந்தித்து பேசவிருப்பதாகவும் கூறியுள்ளார். இருவரும் தற்போது அரசியல் ரீதியாக இணைந்துள்ளதால், அதிமுகவில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.