News January 11, 2025

தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்

image

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயிலில், முன்பதிவு டிக்கெட் தொடங்கி ஒரு சில நிமிடத்திலேயே முடிவடைவதால் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அதிலும் சிலர் தங்களது சொந்த வாகனத்திலேயே விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

Similar News

News February 18, 2026

தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணியா?

image

சென்னையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான, தீர்க்கமான பேச்சுவார்த்தை தேவை. கூட்டணி குறித்து கூறப்படும் கருத்துக்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என்றார். அப்போது, ‘தவெகவுடன் கூட்டணி வைக்குமா?’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ’ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது’ எனக் கூறினார்.

News February 18, 2026

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்!

image

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட கூட்டரங்கில் இன்று(பிப்.18) காலை 11:00 மணிக்கு பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. இதில், 2026-27ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து பிப்.20ஆம் தேதி பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 80க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என கீழே கமெண்ட் பண்ணுங்க.

News February 18, 2026

சென்னை: தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை; அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் தூய்மை பணியாளர், அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு, போதையில் வந்த நபர், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்சர்(35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!