News January 11, 2025

நாகப்பட்டினத்தில் கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!

Similar News

News August 19, 2025

நாகையில் இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று(ஆக.19) நடைபெற உள்ளது. இம்முகமானது அகரகடம்பனூர், எரவாஞ்சேரி மற்றும் திருக்கண்ணங்குடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக அகரகடம்பனூர் கிறிஸ்துராஜா தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

நாகை: அனைத்தும் அருளும் நவநீதேஸ்வரர்

image

நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவநீதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நவநீதேஸ்வரரை வழிபட்டால், பணம் கஸ்டம், குடுமப சிக்கல், திருமண தடங்கல், தீராத நோய் என வாழ்வில் உள்ள சகல கஸ்டங்களும் நீங்கி, நினைத்து கைக்கூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 18, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய ஆட்சியர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, மாவட்ட ஆசிரியர் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணன், தனி துணை ஆட்சியர் பரிமளாதேவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

error: Content is protected !!