News January 11, 2025
உங்கள் வீட்டுக்கடனை எளிதாக அடைக்க ‘5’ டிப்ஸ்

*அவ்வப்போது, EMI தொகையை அதிகரித்து கட்டவும். அது வட்டியை குறைக்க உதவும் *காசு அதிகம் என்றாலும், குறைவான EMI கால அவகாசத்தை தேர்ந்தெடுக்கவும். மொத்த தொகையில் அது வட்டியை குறைக்கும் *கடன் வாங்கும் போது, முடிந்தால் 20% அதிகமாக Down Payment செய்திடுங்கள் *வருடத்திற்கு ஒரு முறை Pre-payments செய்திடுங்கள். அது அசலை நேரடியாக குறைக்கும்.
*EMI கட்டுவதை எப்போதும் தவறவிடாதீர்கள்.
Similar News
News September 15, 2025
கத்தாருக்காக இஸ்ரேலை எச்சரித்த டிரம்ப்

கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் USA-க்கு பங்கு இல்லை என டிரம்ப் விளக்கமளித்துள்ளார். கத்தாரும் அமெரிக்காவும் நல்ல நட்புறவை கொண்டிருப்பதாக கூறிய அவர், இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தார். அதோடு, கத்தாரும் ஹமாஸ் அமைப்பை கட்டுப்படுத்துவதற்கான வழியை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
News September 15, 2025
பாமக தலைவர் அன்புமணி: ECI அங்கீகாரம்

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்(ECI) கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதற்கான கடிதத்தை காட்டினார். மேலும், கடந்த மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை அங்கீகரித்துள்ளதாகவும், மாம்பழம் சின்னமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 15, 2025
கிரியாஊக்கியாக திகழ்ந்த அண்ணா: கமல்ஹாசன்

நாடக கலையில் தொடங்கி திரை கலையில் திகழ்ந்து அரசியலில் ஒளிர்ந்த விதத்தில் எனக்கு எந்நாளும் கிரியாஊக்கியாக அண்ணா திகழ்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்தி மாநிலங்களின் உரிமைகளுக்காக அவர் தந்து சென்ற அரசியல் தத்துவங்கள் நம்மைக் காக்கும் அரணாக திகழ்வதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.