News January 11, 2025
அல்லாள இளைய நாயகா் பிறந்த நாள் விழா: மதுக் கடைகள் மூடல்

ப.வேலூா் வட்டத்தில் அல்லாள இளைய நாயகா் பிறந்த நாள் விழா ஜன.14-இல் ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் வகையில் ஜேடா்பாளையம், ப.வேலூா் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட கபிலா்மலையில் 3 கடைகள், பாகம்பாளையம், சோழசிராமணி, வடகரையாத்தூா்,ப.வேலூா் நான்கு சாலை சந்திப்பு, பழைய புறவழிச்சாலை, உரம்பு, சிவா தியேட்டர் உள்ளிட்ட 10 மதுகடைகள் மூடப்பட உள்ளது.
Similar News
News January 20, 2026
நாமக்கல்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

நாமக்கல் மக்களே உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
நாமக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News January 20, 2026
நாமக்கல்: முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.82-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.80 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00 ஆகவும், கறிக்கோழியின் விலை கிலோ ரூ.152 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.


