News January 11, 2025

அடுத்த 5 நாள்களுக்கு கனமழை

image

தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று IMD அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கனமழை பெய்யவுள்ளது. 13ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும். பொங்கல் நாள்களான 14 & 15 தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Similar News

News January 16, 2026

BREAKING: முதல்வர் ஸ்டாலினின் 4 புதிய வாக்குறுதிகள்

image

திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்களுக்கு 4 புதிய வாக்குறுதிகளை அளிப்பதாக CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். *சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். *வறியோர் எளியோர் வாழ்வுயுர மனிதநேயத் திட்டங்கள். *இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். *தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News January 16, 2026

நாட்டின் வணிக தலைநகரை கைப்பற்றுவது யார்?

image

மகாராஷ்டிராவில் நேற்று மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணி முதல் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று நடந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜக தலைமையிலான <<18868876>>மகாயுதி கூட்டணியே<<>> பெரும்பாலான இடங்களில் வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

News January 16, 2026

மாட்டுப்பொங்கல் கோ பூஜை செய்வது எப்படி?

image

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். கோ வழிபாடு மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று. பசு மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். மாலை அணிவித்து அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும், நீண்ட கால மனக்குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!