News January 11, 2025
ஜன.23ல் ‘விடாமுயற்சி’ ரிலீஸ்?

பொங்கலுக்கு வெளியாவதாக கூறப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டு ரசிகர்களை ஏமாற்றிய அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் வரும் 23-ஆம் தேதி வெளியீடு என போஸ்டர் ஒன்று டிரெண்டாகியுள்ளது. இந்தத் தகவல் லைகா தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அஜித் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். அஜித், திரிஷா, அர்ஜுன் என பலர் நடித்துள்ள படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
Similar News
News January 18, 2026
ரோஹித்தின் 5% ரெக்கார்டு கூட இல்லை..

NZ-க்கு எதிரான முதல் 2 ODI-ல் ரோஹித் சொதப்ப, அவர் சரியாக பயிற்சி எடுக்கவில்லை என இந்திய துணை பயிற்சியாளர் ரயான் டென் டோசேட் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ரோஹித்தின் கரியர் ரெக்கார்டுகளில் 5%-ஐ கூட ரயான் செய்ததில்லை என இந்திய Ex கிரிக்கெட்டர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். பொதுவெளியில் அணி வீரர் குறித்து இப்படி கருத்து தெரிவிப்பது வீரரை மனதளவில் தளர்வடைய செய்யும் எனவும் அவர் சாடினார்.
News January 18, 2026
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

ஸ்டாலின் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட MGR மன்ற இணை செயலாளர்கள் பிச்சை, M.முத்துராமன், நகர அம்மா பேரவை தலைவர் கண்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதன் பின்னணியில், திமுகவில் ஐக்கியமான அதிமுக Ex அமைச்சர் அன்வர் ராஜா செயல்பட்டுள்ளார்.
News January 18, 2026
அரசு கஜானாவில் போதை பொங்கல்: அருண்ராஜ்

தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, அரசின் கஜானாவில் மது விற்பனை பணம் மட்டும் பொங்கி வழிந்துள்ளதாக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். 4 நாள்களில் ₹900 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், ‘மனமகிழ் மன்றங்கள்’ வழியாக கள்ள மது விற்பனை ஆறாக ஓடியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொல்லைப்புறமாக மது விற்பனையை பெருக்குவதுதான் திடாவிட மாடல் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


