News January 11, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹240 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்துள்ளது. நேற்று ₹58,280க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹58,520க்கு விற்பனையாகிறது. நேற்று ₹7,285ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று ₹30 உயர்ந்து ₹7,315ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ₹101க்கு விற்பனையாகிறது.
Similar News
News January 19, 2026
₹3.25 லட்சம் கோடிக்கு ரபேல் விமானங்களை வாங்க முடிவு

பிரான்ஸிடம் இருந்து ₹3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் உள்ளன. இந்த 114 விமானங்களில் 12-18 மட்டுமே வாங்கப்பட்டு, மீதமுள்ளவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்காக பிரான்சின் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தியை தொடங்கும்.
News January 19, 2026
திவ்யா பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், மகுடம் சூடிய திவ்யா கணேசனுக்கு டிராபி வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் மற்றும் மாருதி விக்டோரிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் என மொத்தம் 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 2-வதாக சபரி, 3-வதாக விக்கல் விக்ரம், 4-வதாக அரோரா ஆகியோர் இடம்பிடித்தனர்.
News January 19, 2026
ஜனவரி 19: வரலாற்றில் இன்று

*1966 – இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். *1983 – நாஜி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டார். *2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. * 1855 – ஜி.சுப்பிரமணிய ஐயர், தமிழக இதழியலாளர் பிறந்ததினம். *1990 – இந்திய மதகுரு ஓஷோ மரணம்.


