News January 11, 2025
பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு

TNஇல் பிப்.1ஆம் தேதி முதல் 1.8 கிமீ-க்கு ₹50, கூடுதலாக ஒரு கி.மீ-க்கு ₹18, வெயிட்டிங் சார்ஜ் நிமிடத்திற்கு ₹1.5 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் மாநிலம் முழுவதும் ப்ரீபெய்ட் ஆட்டோக்களில் ₹50 வரை கூடுதலாக வசூலிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆட்டோக்கள் கட்டணம் உயர்வது குறித்து உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க..
Similar News
News September 15, 2025
பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பல்வேறு மோசடிகள் நடந்துவருவதாக புகார்கள் எழுகிறன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News September 15, 2025
68,000 பூத்களில் ஒன்றாக உறுதிமொழி ஏற்ற திமுகவினர்

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் CM ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். மாநிலத்தின் உரிமை காக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம், நீட் தேர்வு ஒழிப்பு, உரிய கல்வி நிதிக்காக போராடுவோம் என 68,000 பூத்களிலும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
News September 15, 2025
RECIPE: சுவையான ஹெல்தி கம்பு வடை!

கம்பில் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கும், புரதம் பசியை கட்டுப்படுத்தி, எடை குறைப்புக்கு உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கம்பில் வடை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
*கம்பு, உளுந்தம் மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, எள்ளு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வட்டங்களாக தட்டவும்.
*இவற்றை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கம்பு வடை ரெடி. SHARE.