News January 11, 2025
வே2நியூஸ் செய்தி எதிரொலி; செங்கல்பட்டு மேம்பாலம் சீரமைப்பு

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு மேம்பால சாலை கடுமையாக சேதமடைந்திருந்தது. வே2 நியூஸ் செய்தி எதிரொலியாகவும், மற்ற தனியார் தொலைக்காட்சி செய்திகள் எதிரொலியாதனையடுத்து நேற்று முன்தினம் சாலை சீரமைக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
Similar News
News January 30, 2026
செங்கை: காதல் வலையில் வீழ்த்திச் சீரழிப்பு

திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் (20), கேரள மாநில மாணவியைக் காதலித்து நன்மங்கலத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆகாஷ் தன்னைத் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் மாணவி புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த ஆகாஷைக் கன்னியாகுமரியில் வைத்துப் பிடித்த தாம்பரம் மகளிர் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
News January 30, 2026
குரோம்பேட்டையில் கொடூரத்தின் உச்சம்!

அரக்கோணத்தைச் சேர்ந்த ஆண்டனி குரோம்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். அந்த சிறுமியிடம் பேசி சந்திக்கும் போதெல்லாம் சிறுமியை வற்புறுத்தி திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த வழக்கில் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் சிறை ரூ.1,000 அபராதம் விதித்தது.
News January 30, 2026
தைப்பூசத்தை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண்: (06003) தாம்பரத்திலிருந்து வரும் ஜன.31 ந்தேதி இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மேலும் இந்த ரயிலில் படுக்கை வசதி இல்லை என்றும் முழுவதும் அமர்ந்து செல்லும் வகையிலானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


