News January 11, 2025
மாதாந்திர உதவித்தொகை பெற 112 மாற்றுத்திறனாளிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்த 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான மருத்துவக் குழு தேர்வு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 112 மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ சான்றிதழ் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் மாதம் ரூ.1500 பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 8, 2025
கள்ளக்குறிச்சியில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

ராயர்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன் கடந்த 3-ம் தேதி முதல் காணவில்லை அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் நேற்று இரவு அவரது மகன் அஜித் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக கிணற்றை பார்த்தபோது அவர் சடலமாக கிணற்றில் மிதந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவரது சடலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது
News December 8, 2025
கள்ளக்குறிச்சியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

சங்கராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. சங்கராபுரம், பந்தளம், வடசிறுவள்ளூர், வடசெட்டியாண்டல், திம்மனந்தல், கிடாங்குடையம்பட்டு, அரூர், ராமராஜபுரம், பூட்டை செம்பரம்பட்டு, அரசம்பட்டு, அரசம்பட்டு, வீரியூர், எஸ்.வி. பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, ஜவுளிக்குப்பம், பச்சேரி, மொட்டம்பட்டி, மேலப்பட்டா, வடசெம்பாளையம் (ம) சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

கள்ளக்குறிச்சியில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இதுகுறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.


