News January 11, 2025
சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இந்த இரு தினங்களில் மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
சென்னை போலீசின் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, கிரேட்டர் சென்னை போலீஸ் “Knights on Night Rounds” திட்டத்தின் கீழ் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பலிகேன், மயிலாப்பூர், அடையார், டி.நகர், அண்ணாநகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவசர தேவைக்கு அவர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
News August 25, 2025
சென்னையில் மின்தடை..!

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்து. அதன்படி பாரிவாக்கம், தேனாம்பேட்டை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், தாம்பரம் போன்ற பகுதிகளில் நாளை(ஆக.26) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி- பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இருக்க மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
BIG NEWS: சென்னையில் 2 பேர் பரிதாப பலி

சென்னையில் விநாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரத்தில் பந்தல் அமைக்கும் போது பிரசாந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சிலைக்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பரத் என்பவர் உயிரிழந்துள்ளார். பண்டிகை காலங்களில் உஷாரா இருங்க.