News January 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 145 ▶குறள்: எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. ▶பொருள்: இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
Similar News
News December 7, 2025
IPL போட்டிகள் பெங்களூருவில் நடக்கும்: DKS உறுதி

சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் <<16705130>>11 பேர் உயிரிழந்ததை <<>>தொடர்ந்து 2026 IPL போட்டிகள் அங்கு நடைபெறாது என செய்திகள் வெளியாகின. முக்கியமாக புனேவில், RCB அணியின் போட்டிகள் நடக்கும் என கூறப்பட்டது. ஆனால் IPL போட்டிகள் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என கர்நாடக கிரிக்கெட் சங்க உறுப்பினரும் DCM-முமான சிவக்குமார் உறுதி அளித்துள்ளார்.
News December 7, 2025
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் டிடிவி தினகரன்

பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்டவை இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. முக்கியமாக, EPS தலைமையை ஏற்க மறுக்கும் டிடிவி, விஜய் பக்கம் செல்வாரா (அ) வேறு கூட்டணி அமைப்பாரா என்பதற்கு இதுவரை பதில் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளுக்குள்(பிப். 24)கூட்டணி முடிவை அறிவிப்பேன் என டிடிவி தெரிவித்துள்ளார். மேலும், 5-வது அணி அமைக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 7, 2025
உரிமைகளை கேட்போர் மதவாதிகளா? தமிழிசை

மத்தியில் திமுகவினர் அமைச்சராக இருந்தபோது ஏன் மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி சிந்திக்கவில்லை என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இஃப்தார் விருந்து, கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஸ்டாலின், எத்தனை குடமுழுக்குகளில் கலந்து கொண்டீர்கள் என்றும் காட்டமாக கேட்டுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உரிமையை தட்டி கேட்பவர்களை மதவாதிகள் என்று முத்திரை குத்துவதாகவும் தமிழிசை விமர்சித்துள்ளார்.


