News January 11, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.10) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது

Similar News

News September 8, 2025

சேலம் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

image

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோற்சவ விழா வரும் செப்.24- ஆம் தேதி தொடங்கி அக்.02- ஆம் தேதி வரை திருப்பதியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மேற்கண்ட நாட்களில் 13 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை 08.00, 09.00, 10.00 மணிக்கும், இரவு 09.00, 09.30, 10.30 மணிக்கும் இயக்கப்படுகிறது.

News September 8, 2025

சேலம்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

image

சேலம் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 8, 2025

நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் மாவட்டத்தில் அய்யாசாமி பூங்கா அருகில் உள்ள அபி மஹால் திருமண மண்டபம், எடப்பாடி பச்சியம்மாள் திருமண மண்டபம், ஆட்டையாம்பட்டி டி.கே.நடேச முதலியார் ஹால் திருமண மண்டபம், ஏகாபுரம் சாய் ஆதிசேசா திருமண மண்டபம், மல்லிக்குந்தம் எம்.எஸ்.எஸ், மஹால், மல்லியக்கரை ஸ்ரீ லட்சுமி தரணி திருமண ஹால் ஆகிய இடங்களில் நாளை (செப்.09) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடக்கின்றது.

error: Content is protected !!