News January 10, 2025
மக்களின் பசி தீர்க்க.. முழு சாப்பாடு ரூ.9 மட்டும்!

மகா கும்பமேளா தொடங்கவுள்ளதையொட்டி உ.பி. CM யோகி ஆதித்யநாத், ‘அம்மாவின் சமையலறை’ உணவகத்தை தொடங்கி வைத்தார். நந்தி சேவா சன்ஸ்தான் என்கிற NGOஆல் நடத்தப்படும் இந்த உணவகத்தில் ரூ.9-க்கு 4 ரொட்டி, பருப்பு, சோறு, இனிப்பு உள்பட ஃபுல் மீல்ஸ் வழங்கப்படுகிறது. 2000 சதுர அடியில் அமைந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் அமர்ந்து சாப்பிடலாமாம். ஏழை மக்கள் இதனால் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
Similar News
News January 3, 2026
அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் அளித்த பொங்கல் பரிசு

அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) குறித்து CM ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு உண்மையாக இருக்கும் என மீண்டும் ஒருமுறை செய்து காட்டியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக <<18749969>>TAPS<<>> அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
தேர்தல் அறிக்கைக்கு ‘ஆப்’ ரிலீஸ் செய்த திமுக!

திமுக தேர்தல் அறிக்கைக்கான ‘DMK Manifesto 2026’ செயலியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இது, தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட கனிமொழி தலைமையிலான குழு, இந்த செயலியை கண்காணித்து, அறிக்கையை தயார் செய்யும்.
News January 3, 2026
‘ரஜினி 173’ படத்தின் கதை இதுதானா..!

ரஜினியின் 173-வது பட அப்டேட் இன்று வெளியான நிலையில், படத்தின் கதை இதுதான் என நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர். அதன்படி, ரஜினி ஒரு காலத்தில் நேர்மையான போலீஸாக இருந்தார். பின் தனது பேமிலிக்காக சாதாரண டெய்லராக (போஸ்டரில் உள்ள கத்தரி, நூலை அடிப்படையாக வைத்து) வாழ்க்கையை தொடர்கிறார். எனினும் தன்னை துரத்தும் எதிரிகளிடமிருந்து எப்படி குடும்பத்தை காக்கிறார் என்பதே கதையாக இருக்கும் என கணித்துள்ளனர்.


