News January 10, 2025

ஆளுநரிடம் முறையிட்ட பிரேமலதா

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆளுநர் R.N.ரவியிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு நேரில் சென்ற அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் ஆளுநருடன் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குமுன் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் ஆகியோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

Similar News

News December 8, 2025

World Roundup: பெத்தலேகத்தில் ஒளிர்ந்த கிறிஸ்துமஸ் மரம்

image

*தென்னாப்பிரிக்காவில் பாரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி. *2027-க்குள் UBS நிறுவனம் உலகம் முழுவதும் 10,000 பேரை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக தகவல். *காஸா விவகாரம் தொடர்பாக டிரம்புடன் இஸ்ரேல் PM பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல். *2 ஆண்டுகளுக்கு பிறகு பெத்தலேகத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரம் ஒளிரூட்டப்பட்டுள்ளது. *அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை ரஷ்யா வரவேற்றுள்ளது.

News December 8, 2025

டிசம்பர் 8: வரலாற்றில் இன்று

image

*1971 – இந்தியக் கடற்படை பாகிஸ்தானின் கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது. *1985 – சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது. *1947 – தமிழ் திரைப்பட இயக்குநர் கங்கை அமரன் பிறந்தநாள். *1953 – தமிழ் திரைப்பட நடிகர் மனோபாலா பிறந்தநாள். *2021 – இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தநாள்.

News December 8, 2025

ஹமாஸ் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம்

image

ஹமாஸை தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா உடனான ஹமாஸின் உறவு தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மேலும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநாவின் நிவாரண அமைப்புக்கு நிதி வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை காரணமாக, ஹமாஸை இன்னும் தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவிக்கவில்லை.

error: Content is protected !!